2025-ம் ஆண்டின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியைக் கண்டது.
ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.91 வரை கூட சென்றது.
இது ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல செய்தி தான். ஆனால், இது இறக்குமதியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியைத் தந்தது. விலைவாசி உயர்வு அச்சம் இந்தியாவின் பக்கம் எட்டிப்பார்த்தது.
ஆனால், சில நாள்களிலேயே, இந்திய ரூபாயின் மதிப்பு சற்று வலுவடைந்தது.
2026-ம் ஆண்டு இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன் படி, “2025-ம் ஆண்டில், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 5 சதவிகிதம் வீழ்ந்துள்ளது. 2022-ம் ஆண்டில் இருந்து இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சியைக் கண்டது கடந்த ஆண்டு தான்.
கடந்த ஆண்டு, ஆசியாவிலேயே மிக வீழ்ச்சியைக் கண்ட நாணயம் இந்திய ரூபாய்.

அமெரிக்கா இந்திய பொருள்களின் மீது 50 சதவிகித வரி விதித்தது இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
அடுத்ததாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து பெருமளவு தங்களது முதலீடுகளை வெளியேற்றினர்.
இன்னொன்று, உலக அளவிலான நிலையற்ற தன்மை, நாணய சந்தையைப் பாதித்தது.