2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி கடகம்: `சவால்களில் வெற்றி உண்டு; கடன் தீரும்!|2026 Vakkiya sanipeyarchi kadaka rasipalangal

Spread the love

8. இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலத்தில் மீனத்தில் அமரும் சனீஸ்வரர், உங்கள் ராசிக்கு 3, 6 மற்றும் 11-ம் வீட்டைப் பார்ப்பதால், திட்டமிட்ட படி வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல் ஆரோக்கியம் நிம்மதி தரும். எதிர்பாராத பணவரவுகள் உண்டு. புதுச் சொத்து வாங்குவீர்கள்.

9. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். அடகில் வைத்திருந்த தங்கத்தை மீட்டெடுப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

10. வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து கொள்முதல் செய்வது அவசியம். பாக்கிகளெல்லாம் இனி தானாக வந்து சேரும். சிலர், கடையை வேறிடத்திற்கு மாற்றுவார்கள். பங்குதார்களிடையே மனக் கசப்புகள் விலகும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, பாரம்பரிய உணவு வகைகளால் லாபம் உண்டு.

11. உத்தியோகஸ்தர்களுக்கு, உங்களைப் புரிந்துகொள்ளும் புதிய அதிகாரி வருவார். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, சலுகைகள் கிடைக்கும். கணினித் துறையினருக்கு, வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் வாய்ப்பு கிடைக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *