2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி தனுசு: எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும்; வீண் செலவுகள் வேண்டாம்!’|2026 Vakkiya Sanipeyarchi thanusu Rasi palangal

Spread the love

தனுசு - சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026

தனுசு – சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026

தனுசு ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்:

1. உங்கள் ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை, சுகவீடான 4-ம் வீட்டில் அமர்கிறார் சனிபகவான். அர்த்த்ராஷ் டம சனி ஆயிற்றே எனச் சிலர் யோசிக்கலாம். சஞ்சலம் தேவையில்லை. எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தைப் பெறுவீர்கள்.

2. சனிபகவான் ஆட்சிபெற்று அமர்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிலர், சொந்த ஊரை விட்டு இடம்பெயர்வார்கள். அதேநேரம், பிள்ளைகளின் நடவடிக்கை யில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு பணியில் முன்னேற்றம் உண்டு. புது டிசைனில் நகைகள் சேரும்.

3. எனினும் சனிபகவானின் நிலைப்படி, இந்தக் காலக்கட்டத்தில் சின்னச் சின்ன வேலைகளிலும் அலைச்சல் உண்டாகலாம். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கவேண்டாம். செலவு கள் அதிகரிக்கும். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். கட்டட அனுமதி பெறுவது அவசியம்.

4. எதன் பொருட்டும் அதிக வட்டிக்குக் கடன் வாங்கவேண்டாம். தாய்வழிச் சொத்துகளில் சிக்கல்கள் வரலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிநாட்டு விசா இப்போது கிடைக்கும். இரவு நேரப் பயணங்களில் கவனம் தேவை.

சனி பகவான்

சனி பகவான்

5. சனி பகவான் பூரட்டாதி சாரத்தில் செல்லும்போது – 6.3.2026 முதல் 2.4.2026 வரை உங்களுக்கும் அம்மாவுக்கும் உடல்நலனில் அக்கறை அவசியப்படும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை முறையாகச் செலுத்திவிடுங்கள்.

6. எனினும், சனி பகவான் 2.4.2026 முதல் 14.4.2027 வரை உத்திரட்டா தியில் செல்லும் காலத்தில், பணவரவு, செல்வாக்கு உண்டு. புதிய சொத்து வாங்குவீர்கள். அரசு வேலைகள் உடனே முடியும்.

7. அவரே ரேவதியில் பயணிக்கும்போது, புது வேலை கிடைக்கும். சம்பளம் உயரும். கணவன் மனைவிக்கு இடையே மனக்காசப்புகள் விலகும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

8. 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் மனக்குழப்பங்கள் இருக்கும். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். ஓரளவு பண வரவு உண்டு. எனினும், வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *