2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி கன்னி: கண்டகச் சனி-பதற்றம் தேவையில்லை. ஆனால் கவனம்… ஏன்| 2026 Vakkiya sanipeyarchi kanni rasi palangal

Spread the love

கன்னி ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்:

1. உங்கள் ராசிக்கு, வாக்கியப் பஞ்சாங்கப் படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை, 7-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார் சனி பகவான். ஆகவே, எந்தவொரு விஷயத்தில் நிதானம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம்.

2. பலகாலம் நீங்கள் எதிர்பார்த்திருந்த விஷயத்தில் சாதகமான பலன் கிடைக்கும். வீட்டில் பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். நீங்களும் வெளிநாடு சென்று வருவீர்கள். ஆனாலும் மகள் கல்யாண விஷயத்தில் அதீத பிரயத்தனம் தேவைப்படும்.

3. விலையுயர்ந்த பொருள்கள், நகைகளைக் கவனமாகக் கையாளுங்கள். பூர்விகச் சொத்துப் பிரச்னைகள் தலைதூக்கும். பிரபலங்கள், வேற்று மொழிக்காரர்கள் உதவியால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். ஒருசிலர், வரும் ஏப்ரல் மாதத்துக்குள் வீட்டைப் புதுப்பிப்பீர்கள். வீடு மாறவும் வாய்ப்பு உண்டு. தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.

4. சனி பகவான் உத்திரட்டாதியில் பயணிக்கும்… 2.4.2026 முதல் 14.4.2027 வரை இழுபறியில் இருந்து வந்த வழக்குகள் உங்களுக்குச் சாதகமாகும். பணப்பற்றாக்குறை நீங்கும் அளவுக்கு வரவு உண்டு. சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.

சனி பகவான்

சனி பகவான்

5. சனி பகவான் 14.4.2027 முதல் 24.4.2028 வரை ரேவதியில் சஞ்சரிப்பார். அப்போது, உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அழகு, இளமை கூடும். கௌரவப் பதவிகள், பொறுப்புகள் தேடி வரும்.

6. அதேபோல் இந்த வருடம் ஜூலை 15 முதல் நவம்பர் வரையிலும் சனி பகவான் வக்ரத்தில் செல்கிறார். அப்போது, எதிர்பார்த்திருந்த வகையில் உதவிகள் கிடைக்கும். உடற்பயிற்சி, யோகா செய்வது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். எனினும் சிறுசிறு உடல் உபாதைகள் வந்து நீங்கும்.

7. சனிபகவான் மீனத்தில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், அவ்வப்போது சோர்வும் மறதியும் வர வாய்ப்பு உண்டு. யோகா, தியானப் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். உணவு விஷயங்களில் அலட்சியம் கூடாது.

8. உங்கள் ராசிக்கு 4 மற்றும் 9-ம் இடங்களும் சனியின் பார்வையைப் பெறுகின்றன. ஆகவே, தாய்வழி உறவினர்களிடையே மனக் கசப்பு கள் ஏற்படலாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சேமிப்புகள் கரையும். வீட்டுச்செலவிலும் தொழில் செலவுகளிலும் திட்டமிடலும் வரையறையும் தேவை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *