மேலும் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி தமது சுயசரிதையில் ’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறைக்கு ஆதரவாக எழுதியிருந்தார். ஆனால், அவரது மகனான தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தமது தந்தையின் கருத்திலிருந்து வேறுபடுகிறார். இப்போது ’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ, அவர்களது பின்புலத்தை ஆராய்ந்தால் ஒருகாலத்தில் அவர்களும் இதற்கு ஆதரவான நிலைப்பட்டையே கொண்டிருந்தது தெரிய வருகிறது.
’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறையை, அதுசார்ந்த பணிகளையெல்லாம் குடியரசுத் தலைவர் 2029-ஆம் ஆண்டுக்குப் பின்னரே ஆரம்பிப்பார் என்பதை இதனை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும். அதனைத்தொரந்து ஒரே நாடு ஒரே தேர்தல் 2034-ஆன் ஆண்டுஏ அமலாகும்.
அதேவேளையில், அனைத்து மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலமும் மக்களவை பதவிக்காலத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன்பின் 2034-இல் வாக்குப்பதிவு ஒரே ஆண்டில் நடத்தப்படும் என்றார்.