“பாரதிய பாஷா புஸ்தக்’ என்ற திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்திய மொழிகளில் எண்ணிம வழியிலான (மின் நூல்கள்) புத்தகங்களை வழங்குவதற்கான ஒரு புதிய முன்னெடுப்பாகும். கல்வி கற்பதை மேலும் எளிதாக அணுகக் கூடியதாக மாற்றுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் தொழில்நுட்பக் கல்வி சார்ந்த பாடங்களை ஆங்கிலம் மற்றும் 22 இந்திய மொழிகளில் நேரடியாக எழுதவும், ஏற்கெனவே ஆங்கிலத்தில் உள்ள பாடப்பொருள்களை 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவை இணையதளத்தில் மின் நூல்களாக பதிவேற்றம் செய்யப்பட்டு பிராந்திய மொழிகளில் தொழில்நுட்பக்கல்வி நூல்கள், பாடப்பொருள் சார்ந்த கற்றல் வளங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.