23 ஆண்டு திருமணத்திலும் தொடரும் மனைவியின் சந்தேகம் – நிபுணர் ஆலோசனை | wife-suspicion-23-years-marriage-solution

Spread the love

இதற்கான முக்கிய தீர்வு, தம்பதியருக்குள் வெளிப்படைத் தன்மை, நம்பிக்கை, சுயமரியாதை மற்றும் பரஸ்பர புரிதலை அதிகரிப்பதுதான். இருவரும் அமைதியாக அமர்ந்து தங்களுக்குள் உள்ள பிரச்னைகளை மனம் திறந்து பேச வேண்டும். ஒருவரின் உணர்வுகளை மற்றொருவர் பொறுமையாகக் கேட்டு புரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோல், உறவில் ‘பெர்சனல் ஸ்பேஸ்’ ஏன் அவசியம், நண்பர்களுடன் நேரம் செலவிடுவதன் முக்கியத்துவம் என்ன என்பதையும் பகிர்ந்து புரிய வைக்க வேண்டும். அதே நேரத்தில், எல்லாவற்றையும் விட தன் இணையரே முக்கியம், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறேன் என்பதையும் உணர்த்துவது அவசியம்.

ரிலேஷன்ஷிப்

ரிலேஷன்ஷிப்

இப்படி பேசி புரிந்துகொண்டு நம்பிக்கையை உருவாக்க முடிந்தால், உறவில் மீண்டும் நிம்மதி உருவாகும். ரகசியங்களை குறைத்து வெளிப்படத்தன்மையை அதிகரித்தால், பிரச்னையின் தீவிரமும் படிப்படியாக குறையும்.

தேவைப்பட்டால் உளவியல் ஆலோசகரை அணுகி பேசுவதும் நல்லது. சரியான வழிகாட்டுதலுடன் இந்த உறவை மீண்டும் ஆரோக்கியமான பாதைக்கு கொண்டு செல்லலாம்.”

தொடர்ந்து பேசுவோம்!

வாசகர்களே இந்த பிரசனைக்கு உங்கள் ஆலோசனைகளையும் கமென்ட்டில் பதிவு செய்யலாமே…

வாசகர்களே, இதே போல் நீங்கள் சந்திக்கும் சிக்கல்கள், உறவு பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டுமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். digital@vikatan.com என்ற மின்னஞ்சளுக்கு ” பேசும் மனது’ என Subject – ல் குறிப்பிட்டு உங்கள் அனுப்பவங்கள், சிக்கல்கள், பிரச்னைகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் தனிநபர் விவரங்கள் பாதுகாக்கப்படும்! தேர்ந்தெடுக்கப் படுபவை உரிய தீர்வுகளுடனும், நிபுணர்களின் வழிகாட்டுத்கலுடனும் விகடன் தளத்தில் வெளியாகும்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *