இன்றைக்கு 30, 35 வயதில் இருக்கும் பலரிடம் ரூ.1 கோடி பணம் இருக்குமா என்று கேட்டால், இருக்காது. அவர்களிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள வீடு அல்லது மனை இருக்கலாம். ஆனால், நமக்குத் தேவைப்படும்போது ஏதோ ஒரு முதலீட்டில் இருந்து இரண்டு, மூன்று நாள்களுக்குள் எடுத்து முக்கியமான செலவுகளை செய்கிற மாதிரி பணம் இருக்கிறதா என்று கேட்டால், பலரும் இல்லை என்றே சொல்வார்கள்.
ஆனால், இதே கேள்வி 55 வயதுடைய ஒரு நபரிடம் கேட்டால், “‘யெஸ், தங்கம், பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் என பல வகையான முதலீடுகளில் பணத்தை வைத்திருக்கிறேன். 4, 5 நாள்களுக்குள் நான் ரூ.1 கோடியை எடுத்துவிட முடியும்” என்பார்.
55 வயதில் ஒருவரிடம் ரூ.1 கோடி இருக்கிற மாதிரி, உங்கள் மகனோ / மகளோ 25 வயதாகும்போது அவர்களிடம் ரூ.1 கோடி இருந்தால், அந்தப் பணம் அவர்களுக்கு எவ்வளவு பெரிய அளவில் நம்பிக்கையைத் தரும் இல்லையா?