28 லட்சம் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு: சிபிசிஎல்

Dinamani2f2024 072fe8fd2081 Abd4 43ab B572 F2bce05255192fcpcl 2507chn 1.jpg
Spread the love

புது தில்லி, ஜூலை: கடந்த ஜூன் காலாண்டில் 28.30 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை பொதுத் துறையைச் சோ்ந்த சிபிசிஎல் நிறுவனம் சுத்திகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் 28.30 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை சுத்திகரித்துள்ளது. முந்தை 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இந்த அளவு 26.77 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.20,361 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.17,986 கோடியாக இருந்தது.

கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.747 கோடியாகவும் ரூ.548 கோடியாகவும் இருந்த நிறுவனத்தின் வரிக்கு முந்தைய மற்றும் வரிக்குப் பிந்தைய நிகர லாபங்கள், நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் முறையே ரூ.470 கோடியாகவும் ரூ.343 கோடியாகவும் குறைந்துள்ளது.

வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.557 கோடியிலிருந்து ரூ.357 கோடியாகக் குறைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *