யாராவது பாட்டு போட்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கும். ‘நான் கடவுள்’ ஆர்யா மாதிரி கொஞ்சநாள் இருந்தேன்.
நான் ரொம்ப சீரியஸாக தான் இருப்பேன். ஆனால் அந்த 29 வயது தான் சில விஷயங்களைக் எனக்கு கற்றுக்கொடுத்தது.
வாழ்க்கையில் சில விஷயங்களை நகைச்சுவையாக எடுத்துகொள்ள வேண்டும் என்று எனக்கு உணர்த்திய வயது 29 தான்.
வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் இருக்கிறது நல்லது என்று நான் உணர்ந்தேன்.

நாம் வாழ்கையில் பெரிய ஆளாக ஆகாமல் இருந்தால் கூட பரவாயில்லை என்று எனக்கு தோன்றியதும் அந்த 29 வயதில் தான்.
அந்த 29 என்ற எண் என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. அதனால் நான் இந்தப் படத்திற்கு பொருத்தமான ஒரு நபர் என்று நினைக்கிறேன்.
எங்கள் வேலையைப் பற்றி இனி இந்த படம் தான் பேச வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.