பின்னர், பாஜக எம்பி திலீப் சைகியா கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.
“மத்திய அரசு மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளது மற்றும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அனைத்து பகுதிகளுக்கும் சென்று வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்துள்ளாார்,” என்று அவர் கூறினார்.
“மாநிலத்தில் வெள்ளம் என்பது வழக்கமான நிகழ்வு தான். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உடனடி நிவாரணம் அளித்து வருகிறது. தர்ராங் மாவட்டத்தில், 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று சைகியா கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிலைமையை கண்காணித்து வருவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வரிடம் வெள்ள பாதிப்பு குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நீர்வளத்துறைக்கு ரூ.200-250 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு பாஜக ஆட்சியில் ரூ.2500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும் மிசாமரி சார், போரோச்சார், எகராச்சி சார், போக்மாரி, ஹதிபோரி, அல்கா சார், ஹட்டியலா சா, சட்டியாரா, தேகா சார், மற்றும் வார் சார் ஆகிய பகுதிகளில் சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள், பெரிய பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளனர்.
பிரம்மபுத்திரா ஆற்றின் அருகே அமைந்துள்ள சுமார் 15-20 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு நாட்டுப் படகுகள் மட்டுமே மிஞ்சியுள்ளன.
மாவட்டத்தில் 1609 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த விவசாய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஹதிபோரி சார் பகுதியில் வசிக்கும் முக்தர் அலி கூறுகையில், “மக்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்” என்றார்.
சுகுர் அலி, “தர்ராங் மாவட்டத்தில் ஆற்றுப் பகுதிகளில் வசிப்பவர்களில் 10,000-15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் இன்னும் தண்ணீருக்குள் தான் வாழ்ந்துவருகின்றனர்” என்றார்.
தர்ராங் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் தங்கள் வீடுகளை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் சாலைகள் மற்றும் கரைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.