3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Dinamani2f2024 09 102fe4ilmqms2fani 20240910004630.jpg
Spread the love

தமிழகத்தில் 3 மாவட்டங்களில கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் முழுவதும் வெயில் கொளுத்திவந்த நிலையில், மூன்று நாள்களாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகின்றது. இதனால் பூமி குளிர்ந்து, இதமான காலநிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க: உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியது!

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப். 21 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு (செப்.21, செப்.22) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

இதையும் படிக்க: ஜெயம் ரவியின் பிரதர் டீசர்!

சென்னையை பொருத்தவரை..

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *