வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை(நவ. 26) 3 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சற்று முன் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பு: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கடந்த 6 மணி நேரத்தில் வங்கக்கடலில் மேற்கு – வட மேற்கு திசையில் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து, தென் மேற்கு வங்கக்கடலில் திரிகோணமலைக்கு தெற்கு – தென்கிழக்கே 450 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து தெற்கு – தென்கிழக்கே 740 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு – தென்கிழக்கே 860 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 960 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில்(நவ. 26) ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரமடையும்.
இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை(நவ. 26) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதியிலும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
மயிலாடுதுறை,
-
நாகப்பட்டினம்,
-
திருவாரூர்,
-
காரைக்கால் மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
விழுப்புரம்
-
கடலூர்
-
அரியலூர்
-
தஞ்சாவூர்
-
புதுக்கோட்டை
-
சிவகங்கை மாவட்டங்களிலும்,
-
புதுச்சேரி பகுதிகளில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
ராமநாதபுரம்,
-
திருச்சிராப்பள்ளி,
-
பெரம்பலூர்,
-
கள்ளக்குறிச்சி,
-
செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.