3-வது நாளாக தங்கம் விலை சரிவு : நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி  – Kumudam

Spread the love

சர்வதேச சந்தையில் டாலர் குறியீட்டின் வலுவே தங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் பணவீக்க புள்ளிவிவரங்கள் இன்னும் கவலை அளிப்பதால், அமெரிக்க பெடரல் ரிசர்வ் (ஃபெடரல்) வட்டி விகிதங்களைக் குறைப்பதைத் தடுத்து வருகிறது. வட்டி விகிதங்கள் உயரும் போது, டாலருக்கான தேவை அதிகரிக்கிறது. இதன் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. 

நேற்றையதினம்  தங்கம் சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,900-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமில்லாமல் கிராம் ரூ.290-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில் தங்கம் விலை இன்று 3-வது நாளாக சரிவை சந்தித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,18,080-க்கும், கிராமுக்கு ரூ.140 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *