3-வது முறையாக ஆட்சி அமைக்கும் மோடி

Modi
Spread the love

 

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19- ந்தேதி முதல் ஜூன் 1- ந் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64 கோடி பேர் வாக்களித்தனர்.

வாக்கு எண்ணிக்கை

இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சேர்ந்துஅமைத்த இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. பிரசார கூட்டங்களில் சரமாரியாக இரு கூட்டணி கட்சிகளும் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இதனல் பாரளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் அனல் பறந்தது.
இந்த நிலையில் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. இதில் பா.ஜனதா, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள்இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Ee

இந்தியா கூட்டணி

கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கி இந்தியா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது.மேலும் பா.ஜனதா கட்சியில் முக்கிய பிரமுகர்கள் பலர் வெற்றிவாய்ப்புகளை இழந்து இருப்பது அந்த கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று இரவு 8.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 19 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெற மொத்தம் 272 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். மத்தியில் 3வது முறையாக மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது.

3-வது முறையாக

இந்தியா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளதால் ஆட்சி அமைக்கும் வைகையில் பா.ஜனதாக கூட்டணியில் உள்ள கட்சிகள் சிலவற்றுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. இதனால் அரசியில் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இன்று இரவு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதால் மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பது நாளை தான் உறுதியாக தெரியவரும்.
இதற்கான காய் நகர்த்தலை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தொடங்கி விட்டதாக தெரிகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிஜு ஜனதா தள கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் உடனும் பேசியுள்ளார். இதனால் அரசியல் களம் மாறும் என்று சூழல் ஏற்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை காங்கிரஸ் கூட்டணிக்கு மற்ற கட்சியினர் யாரும் ஆதரவு என்று அறிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Akil

உத்தரப்பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு எதிர் பார்த்த வெற்றி கிடைக்காததால் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத இக்கட்டான நிலைக்கு சென்று உள்ளது. அங்குள்ள 80 தொகுதிகளில் 33 தொகுதிகளில் மட்டுமே பா.ஜனதா முன்னிலையில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி 37 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும் பிடித்து உள்ளன. இந்த மாநிலத்தில் ஏற்பட்ட தோல்வி பா.ஜனதாவுக்கு பெரும் அடியாக பார்க்கப்படுகிறது.
எனினும் டெல்லி, பிஹார், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலம் நம்பிக்கை கொடுத்து உள்ளது. மத்திய பிரதேசத்தில் 29 தொகுதிகளையும் பா.ஜனதா அப்படியே அள்ளி இருக்கிறது.
மகராஸ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் – 13, பாஜக – 10, சிவ்சேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) – 10, சிவ்சேனா 6 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

இதற்கிடையே பிரதமர்மோடி தனது வலைதள பக்கத்தில்,மக்கள் தொடர்ந்து 3 வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்! இது இந்திய வரலாற்றில் இது ஒரு வரலாற்று சாதனை. மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் சிறப்பாகச் செயல்படுவோம் என்று உறுதியளிக்கிறேன். கட்சியின் வெற்றிக்கு கடினமாக உழைத்த அனைவருக்கும் நான் தலை வணங்குகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளளார்.

இதையும் படியுங்கள்: ஸ்மிருதி இராணி-எல்.முருகன் படுதோல்வி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *