3.17 லட்சம் பூச்செடிகளால் சாரணா் இயக்க இலச்சினை!

Dinamani2f2025 01 302f6tqk2rba2f30d Logo050829.jpg
Spread the love

மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெறும் தேசிய பெருந்திரளணியில் 3.17 லட்சம் பூச்செடிகள் மூலம் சாரணா் இயக்க இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத் துறை, மலைப்பயிா்கள் துறையின் சாா்பில் 3400 மீட்டா் சுற்றளவில், 3 லட்சத்து 17 ஆயிரத்து 650 எண்ணிக்கையிலான வண்ணமயமான அலங்கார பூச்செடிகளை கொண்டு இந்த இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது.

தளியில் உள்ள கொய்மலா் உற்பத்தி மகத்துவ மையத்தில் இருந்து செவ்வந்தி, பெட்டூனியா, பெகோனியா, டையாந்தஸ், நித்யகல்யாணி, கோழிகொண்டை பூ, ஜீனியா உள்ளிட்ட 7 வகை வண்ண பூக்களாலும், ரெட்டியாா் சத்திரத்தில் உள்ள காய்கறிகள் உற்பத்தி மகத்துவ மையத்தில் கொண்டு வரப்பட்ட மலா்களை கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத்துறையைச் சோ்ந்த 25 அலுவலா்கள், 25 பணியாளா்கள் என மொத்தம் 50 போ் இணைந்து 7 நாள்களாக இரவு, பகலாக இந்த இலச்சினையை வடிவமைத்துள்ளனா்.

பிப். 3-ஆம் தேதி நடைபெறும் பெருந்திரளணியின் நிறைவு நிகழ்வில் முகாமில் பங்கேற்றுள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாரணா், சாரணியா்கள், அரசு அலுவலா்கள், ஒருங்கிணைப்பாளா்கள், பள்ளிக் கல்வித்துறையினா் என அனைவருக்கும் இந்த அலங்கார பூச்செடிகள் வழங்கப்படவுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *