30க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா ஆகிய நிறுவனங்களின் தலா 11 விமானங்களுக்கு சனிக்கிழமை மிரட்டல் வந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் ஒழுங்குமுறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட்டன என்று ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கடந்த 13 நாட்களில், இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 300க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலான அச்சுறுத்தல்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே வந்தவை.
யமுனையில் குளித்த பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி!
இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான பதிவுகள், தகவல்களை ஃபேஸ்புக், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் உடனே நீக்க வேண்டும் என்றும் பதிவுகளை நீக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் நிலையில் சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
இதனிடையே குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள 10 ஹோட்டல்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.