30 பேர் கைதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு | Rameswaram fishermen announce strike demanding release of fishermen

1379326
Spread the love

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு ஹரி கிருஷ்ணன், ஜோசப், நெப்போலியன், ஜெபமாலை ராஜா ஆகியோருக்குச் சொந்தமான 4 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்து, படகுகளிலுந்த 30 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அக்.23 வரையிலும் நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் மீனவ பிரதிநிதி சேசுராஜ் தலைமையில் மீனவ ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீனவர்களை சிறைப்பிடித்ததைக் கண்டித்தும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை தாயகம் திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுத்து வர வலியுறுத்தியும் சனிக்கிழமை ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டமும், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *