வடகொரியா:
வடகொரியா என்றாலே மர்மங்கள் நிறைந்த நாடாக விளங்குகிறது. அந்த நாட்டின் அதிபர் கிம்ஜாங் உன் அணு ஆயுதங்களை குவித்து தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து மிரட்டி வருகிறார். அந்த நாட்டிற்குள் எளிதாக யாரும் சென்று வரமுடியாது. அந்த நாட்டின் சட்டதிட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தும் மரம்மமாகவே இருந்து வருகிறது.
மழை வெள்ள பாதிப்பு
இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க தவறியதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளில் 30 பேரை ஒரே நேரத்தில் தூக்குப்போட்டு கொலை செய்யப்பட்டதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதிபர் கிம் ஜாங் உன் இதற்கான உத்தரவை பிறப்பித்து நிறைவேற்றப்பட்டு இருப்பதாக தெரிகிறது. ஆனால் இது தொடர்பான எந்த செய்தியும் வட கொரியாவில் இருந்து கசியவில்லை. தென்கொரியாவில் உள்ள செய்தி நிறுவனம் இந்த விவகாரத்தை வெளிஉலகத்திற்கு கொண்டு வந்து உள்ளது.
பாலியல் சீண்டல்கள் எல்லா துறைகளிலும் நடக்கிறது.சினிமா மீது மட்டும் ஏன் பழி போடுறீங்க? – நடிகை குஷ்பு
30 அதிகாரிகளுக்கு ஒரே நேரத்தில் தூக்கு
கடந்த ஆகஸ்ட் தொடக்கத்தில் உய்ஜுவில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின் போது, கிம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து மீட்புப் பணிகள் குறித்து விவாதித்தார்.அப்போது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவை முறையாக செயல்பட்டு தடுக்க தவறிய அதிகாரிகளை “கண்டிப்பாக தண்டிக்க” கிம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து கிம் ஜாங் உன் உத்தரவுப்படி கடந்த மாதம் குறைந்தது 30 அரசு அதிகாரிகள் அதிகாரிகள் மீது ஊழல் மற்றும் கடமை தவறியதாக குற்றம் சாட்டப்பட்டு,ஒரே நேரத்தில் தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.