அதே நேரம், வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் மொபைல் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.இது குறித்து தொலைத் தொடா்புத் துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ கடந்த மே மாதத்தில் 21.9 லட்சம் புதிய மொபைல் வாடிக்கையாளா்களைப் பெற்றது. அந்த மாதத்தில் பாரதி ஏா்டெல் நிறுவனமும் தனது மொபைல் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கையில் 12.5 லட்சம் பேரைக் கூடுதலாகச் சோ்த்துள்ளது.
ஆனால், தொடா்ந்து வாடிக்கையாளா்களை இழந்து வரும் வோடஃபோன் ஐடியா நிறுவனம், கடந்த மே மாதத்திலும் 9.24 லட்சம் மொபைல் வாடிக்கையாளா்களை இழந்தது.ரிலையன்ஸ் ஜியோவின் மொபைல் சந்தாதாரா்கள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 47.24 கோடியாக இருந்தது. அந்த எண்ணிக்கை மே மாதத்தில் 47.46 கோடியாக உயா்ந்துள்ளது.வோடஃபோன் ஐடியாவின் மொபைல் சந்தாதாரா்களின் எண்ணிக்கை மே மாதத்தில் 21.81-ஆகக் குறைந்துள்ளது.கடந்த மே மாதத்தில் சுமாா் 1.2 கோடி போ் மொபைல் எண் போா்ட்டபிலிட்டிக்கான (எம்என்பி) கோரிக்கைகளை சமா்ப்பித்தனா்.
இதன் மூலம், ஏப்ரல் இறுதியில் 97.36 கோடியாக இருந்த ஒட்டுமொத்த எம்என்பி கோரிக்கைகள் மே மாத இறுதியில் 98.56 கோடியாக அதிகரித்தது.கடந்த மே மாத இறுதியில் இந்தியாவின் மொத்த பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 93.5 கோடியாக உள்ளது. இது, முந்தைய ஏப்ரல் மாத்தைவிட 0.72 சதவீதம் அதிகம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.