37-வது சதம் விளாசிய ஜோ ரூட்; ராகுல் டிராவிட், ஸ்டீவ் ஸ்மித் சாதனை முறியடிப்பு!

Spread the love

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவரது 37-வது சதத்தைப் பதிவு செய்தார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் நேற்று (ஜூலை 10) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

ஜோ ரூட் சாதனை

முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று (ஜூலை 11) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து டெஸ்ட் போட்டிகளில் தனது 37-வது சதத்தை ஜோ ரூட் பதிவு செய்தார்.

இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் (36 சதங்கள்) விளாசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இருவரின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.

சதம் விளாசி அசத்திய ஜோ ரூட், சிறிது நேரத்திலேயே பும்ரா பந்துவீச்சில் 104 ரன்களில் போல்டானார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசியவர்கள் விவரம்

சச்சின் டெண்டுல்கர் – 51 சதங்கள்

ஜாக் காலிஸ் – 45 சதங்கள்

ரிக்கி பாண்டிங் – 41 சதங்கள்

குமார் சங்ககாரா – 38 சதங்கள்

ஜோ ரூட் – 37 சதங்கள்

England’s Joe Root scored his 37th Test century.

இதையும் படிக்க: இந்திய அணியில் நிதீஷ் குமார் தொடர்ந்து இடம்பெற வேண்டும்: அனில் கும்ப்ளே

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *