இந்தப் படம், 1989-இல் படப்பிடிப்பு முடிந்த பிறகு தயாரிப்பாளர் ராஜா ராய் லண்டனுக்கு பிசினஸ் காரணமாகச் சென்றதால் தாமதமானது. அங்கு அவரது இளம் மகனை இழந்த சோகம், இப்படத்தின் இயக்குநர் ஹர்மேஷ் மல்ஹோத்ராவின் மறைவு உள்ளிட்ட பல காரணங்கள் இப்படத்தின் ரிலீஸை நிறுத்தியது.
ஆனால், இப்போது தயாரிப்பாளர்கள் படத்தை ரசிகர்களுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள். AI உதவியுடன் படத்தை ரீமாஸ்டரிங் செய்து நவீன திரையரங்கு தரத்திற்குக் கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறார்கள்.

ரிலீஸ் குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா ராய், “இந்தப் படத்திற்காக நாங்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை.
இன்று இப்படம் இறுதியாகப் பார்வையாளர்களைச் சந்திக்கப் போகிறது என்பதில் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.
அனைத்து தடைகளையும் கடந்து இந்தப் படம் உயிர்ப்புடன் இருக்கிறது” எனக் கூறியிருக்கிறார். ஏப்ரல் மாதத்தில் இத்திரைப்படம் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.