396 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: ஆசிரியர் தினத்தையொட்டி உதயநிதி வழங்கினார் | Udhayanidhi presented Dr Radhakrishnan Award to 396 peoples

1375518
Spread the love

சென்னை: ஆசிரியர் தினத்​தையொட்​டி, தமிழகத்​தின் 396 ஆசிரியர்​களுக்கு டாக்​டர் ராதாகிருஷ்ணன் விருதை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வழங்​கி​னார். நாட்​டிலேயே தமிழகத்​தில் மட்​டும்​தான் 70 சதவீத மாணவர்​கள் உயர்​கல்வி படிக்க செல்​கின்​றனர். இதை ஆசிரியர்​கள் 100 சதவீத​மாக உயர்த்த வேண்​டும் என்று அவர் கேட்​டுக் கொண்​டார்.

முன்​னாள் குடியரசுத் தலை​வர் சர்​வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்​டம்​பர் 5-ம் தேதி ஆண்​டு​தோறும் ஆசிரியர் தினமாக கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்​டி, சிறந்த ஆசிரியர்​களை தேர்வு செய்து நல்​லாசிரியருக்​கான ‘டாக்​டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுர​வப்​படுத்தி வரு​கிறது. விரு​தாளர்​களுக்கு ரூ.10,000 ரொக்​கம், வெள்​ளிப் பதக்கம், பாராட்​டுச் சான்​றிதழ் வழங்​கப்​படும்.

அதன்​படி, இந்த ஆண்​டில் மாநில நல்​லாசிரியர் விருதுக்கு 396 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர். அவர்​களுக்கு விருது வழங்​கும் விழா சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தலைமை விருந்​தின​ராக கலந்​து​கொண்​டு, அவர்களுக்கு விருது வழங்கி கவுர​வித்​தார். தவிர, ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) மூல​மாக பட்​ட​தாரி ஆசிரியர் பணிக்கு தேர்வான 2,810 பேருக்கு பணி நியமனம் வழங்​கு​வதன் அடை​யாள​மாக 40 பேருக்கு நியமன ஆணை​களை​யும் உதயநிதி வழங்கினார்.

விழா​வில் அவர் பேசி​ய​தாவது: திரா​விட இயக்​கத்​துக்​கும், ஆசிரியர்​களுக்​கும் எப்​போதும் நெருங்​கிய தொடர்பு உண்​டு. பகுத்தறிவு, சுயமரி​யாதைக்​கான ஆசிரியர் பெரி​யார். ‘முரசொலி’யை தொடங்கி தன் வாழ்​நாள் முழு​வதும் ஆசிரிய​ராக இருந்​தார் கருணாநி​தி. அந்த வழி​யில், திரா​விட மாடல் என்ற மிகப்​பெரிய தத்​து​வத்​தின் ஆசிரிய​ராக செய​லாற்றி வரு​கிறார் முதல்​வர் ஸ்டாலின்.

ஆசிரியர்​களின் பல்​வேறு கோரிக்​கைகளை முதல்​வர் நிறைவேற்​றி​யுள்​ளார். மற்ற கோரிக்​கைகளை​யும் நிச்​ச​யம் நிறைவேற்வார்.கல்வி மூல​மாகவே சமூக மாற்​றத்தை கொண்​டுவர முடி​யும். அதி​காரமிக்க கல்​வியை மாணவர்​களுக்கு கொண்டு​போய் சேர்க்​கும் நீங்​கள் அனை​வரும் புரட்​சி​யாளர்​கள்​தான். அறி​வார்ந்த சமூகத்தை ஆசிரியர்​களால்​தான் உரு​வாக்க முடி​யும்.

எனவே, மாணவர்​களின் அறி​வியல் மனப்​பான்​மையை நீங்​கள் வளர்த்​தெடுக்க வேண்​டும். சமூக நீதி, பகுத்​தறிவை பயிற்​று​விக்க வேண்​டும். நாட்​டிலேயே தமிழகத்​தில் மட்​டும்​தான் 70 சதவீத மாணவர்​கள் உயர்​கல்வி படிக்க செல்​கின்​றனர். இதை ஆசிரியர்​கள் 100 சதவீத​மாக உயர்த்த வேண்​டும். ஆசிரியர்​களின் வளர்ச்​சிக்கு அரசு எப்​போதும் துணை நிற்​கும். நீங்​களும் அரசுக்கு அதிக ஆதரவை தரவேண்​டும்.

ஆசிரிய​ராக இருந்து குடியரசுத் தலை​வ​ராக உயர்ந்த டாக்​டர் ராதாகிருஷ்ணனுக்கு திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் சிலை அமைக்​கும் பணி விரை​வில் தொடங்​கப்பட உள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார். இந்த நிகழ்​வில் அமைச்​சர்​கள் அன்​பில் மகேஸ், மா.சுப்​பிரமணி​யன், சேகர்​பாபு, பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் சந்​திரமோகன், இயக்​குநர் கண்​ணப்​பன், தொடக்கக்கல்வி இயக்​குநர் நரேஷ், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்​பினர் பழனி​சாமி உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

முதல்​வர் வாழ்த்து: ஆசிரியர் தினத்தை முன்​னிட்டு முதல்​வர் ஸ்டா​லின் தனது சமூக வலைதள பதி​வில், ‘ஆசிரியர்​களை நம்​பித்​தான் பெற்​றோர் தங்​கள் பிள்​ளை​களை ஒப்​படைக்​கின்​றனர். பிள்​ளை​களும் பெற்​றோரை​விட ஆசிரியர்​கள் சொல்​வதையே அதி​கம் நம்​பு​கின்​றனர். அந்த மாணவர்​களுக்கு தமிழ், அறம், அரசி​யல், அறி​வியல் என அனைத்​தை​யும் கற்​பித்து அவர்​களது உயர்​வுக்​காக பாடு​படும் நல்​லாசிரியர்​கள் அனை​வருக்​கும்​ எனது ஆசிரியர்​ தின நல்​வாழ்த்​துகள்​’ என்​று தெரிவித்​துள்​ளார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *