பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஏற்கனவே தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப்பதக்கங்கள் பெற்று இருந்தது. மனுபாக்கர் இதில் அசத்தி இருந்தார்.
3-வது வெண்கல பதக்கம்
இந்தநிலையில் இன்று நடைபெற்ற ஆண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 பிரிவில் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று உள்ளார். இதனால் இந்தியாவிற்கு 3-வதாக வெண்கலப்பதக்கம் கிடைத்து இருக்கிறது.
வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்குபிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
மோடி பாராட்டு
“ஸ்வப்னில் குசாலேவின் சிறப்பான பங்களிப்பு! பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் ஆடவர் 50 மீட்டர் ரைஃபிள் 3 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள்.
அவரது பங்களிப்பு சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், அவர் சிறந்த திறன்களை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.