4 ஆண்டுகளில் 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340 கோடி பயிா்க் கடன்: தமிழக அரசு தகவல்

dinamani2F2025 07 202F0yfrfi1w2Fmkstalin
Spread the love

சென்னை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கூட்டுறவுத் துறை மக்களுக்கு, குறிப்பாக ஏழை எளிய நலிந்த பிரிவு மக்களுக்கு நன்மைகளைச் செய்வதற்கு உருவான ஒரு துறை. இத்துறை மூலம் பல

பணிகள் நிறைவேற்றப்பட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது, நாடும் வளர்ந்துள்ளது.

கூட்டுறவு சங்கங்களின்  முக்கிய பணி பொதுமக்களுக்கும் தொழில் அமைப்புகளுக்கும் கடன் வழங்கி முன்னேற்றங்களுக்கு வழி வகுப்பதே ஆகும்.

அரசு கூட்டுறவு அமைப்புகள் மூலம் மக்களுக்குக் கடன் உதவிகளை வழங்கி வருகிறது. கடன்களால் மக்கள் சிரமப்பட நேரும் காலங்களில் கடன்களை ரத்து செய்தும் உதவுகிறது அரசு. 

2021 தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு குடும்பத்தில் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக் கடன் பெற்று 31.3.2021 வரை நிலுவையிலிருந்த நகைக் கடன் தொகை ஏறத்தாழ ரூ. 6,000 கோடியைத் தள்ளுபடி செய்து ஆணையிட்டார்கள். அதன்படி, 11.70 இலட்சம் பயனாளிகளுக்கு ரூ.4,904 கோடி அளவிற்குத்  தள்ளுபடிச் சான்றிதழுடன், அவர்கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டுள்ளன. 

அதேபோன்று கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில், 31.3.2021 அன்று நிலுவையில் இருந்த  கடன் தொகை ரூ.2,118.80 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு 1,01,963 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 10,56,816 மகளிர் பயன்பெற்றுள்ளனர்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்ச வரம்பு ரூ.20 லட்சம் என்பதை ரூ.30 லட்சமாக உயர்த்தி 1,90,499 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10,997.07 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

பயிர்க் கடன்களை உரிய கெடு தேதிக்குள் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்கடன்களாக 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 11,88,440 விவசாயிகளுக்கு கால்நடை வளா்ப்பு மற்றும் அதன் தொடா்புடைய பணிகளுக்காக ரூ.6,372.02 கோடி கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளது.

கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான கடன்கள் ஆண்டிற்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் 19,358 கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூ.63.22 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 47,221 மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் தொடங்க ரூ.225.94 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 16,578 பணிபுரியும் பெண்களுக்கு ரூ.470.01 கோடியும், 49,000 மகளிா் தொழில் முனைவோருக்கு ரூ.283.27 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *