4 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு: சாத்தனூர் அணை ஆய்வு புள்ளி விவரங்கள் கூறுவது என்ன? | What do the Sathanur Dam survey statistics say

1342833.jpg
Spread the love

சென்னை: ​​​​திரு​வண்ணாமலை மாவட்டம் சாத்​தனூரில் தென்​பெண்ணை ஆற்றின் குறுக்கே 1958-ல் கட்டப்​பட்ட சாத்​தனூர் அணை, 119 அடி உயரம் கொண்​டது. தமிழகத்​தின் முக்​கியமான அணைகளில் ஒன்றான இந்த அணை திரு​வண்ணா​மலை, கள்ளக்​குறிச்சி, விழுப்பு​ரம், கடலூர் மாவட்​டங்​களில் விவசா​யத்​துக்கான முக்கிய நீரா​தா​ர​மாகத் திகழ்​கிறது.

கடந்த நவ. 30-ம் தேதி ஃபெஞ்சல் புயல்காரணமாக தென்​பெண்ணை ஆற்றின் நீர்ப்​பிடிப்பு பகுதி​களில் கனமழை கொட்டியது. இதனால் சாத்​தனூர் அணைக்கு நீர்​வரத்து அதிகரிக்கத் தொடங்​கியது. டிச. 1-ம் தேதி காலை விநாடிக்கு 5,000 கன அடியாக இருந்த நீர்​வரத்து நள்ளிரவு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்​தது. மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு 1.68 லட்சம் கனஅடியாக நீர்​வரத்து உயர்ந்​தது. இதனால், அணையின் நீர்​மட்டம் முழு கொள்​ளளவான 119 அடியை நெருங்கியது.

இதையடுத்து, அணைக்கு வந்த தண்ணீர் முழு​வதும் தென்​பெண்ணை ஆற்றில் வெளி​யேற்​றப்​பட்​டது. முறையான அறிவிப்பின்றி தண்ணீர் திறந்​து​விடப்​பட்​ட​தால், திரு​வண்ணா​மலை, கள்ளக்​குறிச்சி, விழுப்பு​ரம், கடலூர் மாவட்​டங்​களில் வெள்ளப் ​பாதிப்பு ஏற்பட்டது என்று எதிர்​க்கட்​சிகள் குற்​றம்​சாட்டு​கின்றன. கனமழைக்கு முன்னரே அணையின் நீர்​மட்டம் ஏறத்தாழ முழு கொள்​ளளவை எட்டிய நிலை​யில், அணையில் இருந்து தண்ணீரை வெளி​யேற்றிய​தால் ஏற்பட்ட வெள்​ளப்​பெருக்கை தவிர்த்திருக்க முடி​யாதா என்ற கேள்வி எழுகிறது. முன்னறி​விப்​பின்றி அணையில் இருந்து தண்ணீர் வெளி​யேற்​றப்​பட்​ட​தால்​தான் வெள்​ளப்​ பெருக்கு ஏற்பட்​டதாக எதிர்க்​கட்​சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்​டி​யிருந்​தார். இதேபோல, படிப்​படியாக தண்ணீரைத் திறந்​திருந்​தால் பெரு​வெள்ளம் ஏற்பட்​டிருக்​காது என்று பாமக தலைவர் அன்புமணி தெரி​வித்​தார்.

ஆனால், எதிர்க்​கட்​சித் தலைவர்களின் குற்​றச்​சாட்டுகளை தமிழக அரசு முற்றி​லுமாக மறுத்தது. அனைத்து நடைமுறை​களும் கடைபிடிக்​கப்​பட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்​கப்​பட்ட பின்​பு​தான் தண்ணீர் திறந்​து​விடப் பட்டதாக அரசு விளக்கம் அளித்​தது. அப்பகு​தி​யில் பெய்த மழை, அணையின் கொள்​ளளவு, தண்ணீர் வரத்து தொடர்பான தரவு​களின் ஆய்வு மூலம், உண்மை​யில் என்ன நிகழ்ந்தது என்பதை அறிந்​து​கொள்​ளலாம்.

கடந்த 70 ஆண்டு​களில் இல்லாத வகையில் அரூர், ஊத்தங்​கரை, செங்கம் வட்டங்​களில் டிச. 2-ல் கனமழை பெய்​தது. அன்று அரூரில் 251 மி.மீ. ஊத்தங்​கரை​யில் 185 மி.மீ. மழை பதிவானது. அணையின் கீழ்ப்​பகுதி வட்டங்​களில் அதிக மழை பெய்​த​தால், தென்​பெண்​ணை​யில் வெள்ளம் பெருக்​கெடுத்து ஓடியது.

70 ஆண்டு​களில்… அதேபோல, அணையின் கீழ்ப்​பகு​தி​களான தண்ட​ராம்​பட்டு, திரு​வண்ணா​மலை​யில் டிச. 1, 2-ம் தேதி​களில் கனமழை பெய்​தது. குறிப்​பாக, கள்ளக்​குறிச்சி மாவட்டம் சங்க​ராபுரத்​தில் 225 மி.மீ. மழை பதிவானது. கடந்த 70 ஆண்டு​களில் இதுவே அதிகபட்ச மழை அளவாகும். 2023 டிசம்​பரில் பெய்த கன மழையால் அணையின் மொத்த கொள்​ளள​வில் 95 சதவீதம் நீர் நிரம்​பியது. பின்னர் மழை இல்லாததால் அணை நீர்​வரத்து குறைந்​தது. அதேநேரத்​தில், அணையில் இருந்து ஆரம்பத்​தில் விநாடிக்கு 530 கனஅடி வீதம் வெளி​யேற்​றப்​பட்ட தண்ணீர், பாசன வசதி, குடிநீர், மின்சார உற்பத்​திக்காக 1,430 கனஅடியாக அதிகரிக்​கப்​பட்​டது.

கடந்த மே-ஜுன் மாதங்​களில் கொள்​ளளவு 20 சதவீதம் அள வுக்கு குறைந்ததை தொடர்ந்து, அணையில் இருந்து நீர் வெளி​யேற்​றப்​படுவது நிறுத்​தப்​பட்​டது.ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் மழை காரணமாக அணையின் நீர்​இருப்பு 40 சதவீதம் அதிகரித்​தது. தொடர்ந்து கனமழை பெய்​த​தால் செப்​டம்​பரில் நீர்​இருப்பு 90 சதவீத​மாக​வும், அக்டோபரில் 95 சதவீத​மாக​வும் உயர்ந்​தது.

அணையின் நீர்​இருப்பு 95 சதவீதம் என்ற அளவில் இருக்​கும் வகையில், செப்​டம்​பர், அக் டோபர் மாதங்​களில் 500 முதல் 1,200 கனஅடி வரை படிப்​படியாக நீர் வெளி​யேற்​றப்​பட்​டது. ஏற்கெனவே அணையில் 95 சதவீதம் நீர் இருந்த நிலை​யில், நவ. 29 முதல் டிச. 5 வரை யிலான நாட்​களில் அணையின் நீர்ப்​பிடிப்பு பகுதி​யில் பெய்த கனமழை​யால் அணைக்கு நீர்​வரத்து பெரிதும் அதிகரித்​தது. டிச. 2 முதல் 5-ம் தேதி வரை நீர்​வரத்து 1.3 லட்சம் கனஅடியாக இருந்​தது.

அதே அளவு தண்ணீர் வெளி​யேற்​றப்​பட்டு வந்தது. ஏற்கெனவே அணையில் 95 சதவீதம் நீர் இருந்த நிலை​யில், அணைக்கு வந்த அதிகப்​படியான மழைநீரை சேமித்து ​வைத்​துக்​கொண்டு, பின்னர் ​திறந்​து​விடுவது என்பது சாத்​தி​யமில்​லாதது. இந்த சூழலில் தொடர்​ந்து கனமழை ​கொட்​டிய​தால்​ நிலைமை மோச​மானது என்​று புள்​ளி ​விவர ஆய்​வு​கள்​ தெரி​விக்​கின்​றன.

சாம்பவி பார்த்தசாரதி/ விக்னேஷ் ராதாகிருஷ்ணன்

(‘தி இந்​து’ ஆங்​கில நாளிதழில்​ இருந்​து..)

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *