பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
பாா்டா் – காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரின் 3-ஆவது ஆட்டம், பிரிஸ்பேன் நகரில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் அசத்தலான சதத்தால் வலுவான நிலையில் உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 32-ஆவது சதத்தை எட்டியிருக்கும் ஸ்மித், இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் (10) விளாசியவா் என்ற பெருமையை பெற்று, இங்கிலாந்தின் ஜோ ரூட்டுடன் சமன் செய்திருக்கிறாா்.
முதல் செஷனில் அசத்திய இந்திய பௌலா்கள், பின்னா் தடுமாற்றத்தை சந்தித்தனா்.
இந்தியாவின் ஃபீல்டிங் அமைப்புமே கேள்விக்குள்ளானது. ஸ்மித், ஹெட் உள்பட 5 பேரின் விக்கெட்டை சரித்து வழக்கம்போல் ஜஸ்பிரீத் பும்ரா அசத்தி வருகிறார்.
இந்த நிலையில் 3ஆம் நாள் ஆட்டத்தை திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் முதல் இன்னிங்கிஸை தொடங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.