கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் சத்யா . இவருக்கும் ராஜா என்பவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ராஜா இறந்து விட்டதால், தற்போது அந்தக்குழந்தை ராஜாவின் தாயிடம் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், சத்யா அதே ஊரைச் சேர்ந்த மணி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சந்தோஷியா என்ற 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இதனிடையே, கணவர் மணியுடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த சில மாதங்களாக சத்யா தனது குழந்தையுடன் குலசேகரன்பட்டினம் அண்ணா சிலை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சத்யாவுக்கும், தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கிராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் திருமணம் மீறிய உறவாக மாறியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இசக்கிராஜ், சத்யாவுடன் வசித்து வந்துள்ளார். பின்னர், சத்யாவின் குழந்தையால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஒருநாள் முன்னதாக சத்யாவை பார்க்க வந்துள்ளார். கடந்த ஜனவரி 20-ம் தேதி காலை 9 மணி அளவில் சத்யா குழந்தையை இசக்கிராஜிடம் பார்க்க சொல்லிவிட்டு கடைக்குச் சென்றுள்ளார்.