“மத்திய அரசில் மட்டும் 10 லட்சம் மத்திய அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன – இது நமது படித்த இளைஞர்களுக்கு வெறும் கேலிக்கூத்தாக இல்லை என்றாலும், நமது அரசாங்கத்தின் செயல்பாட்டில் ஒரு தடையாக உள்ளது” என்று அவர் கூறினார்.
“இந்தியாவில் உள்ள தொழிலாளா்களில் 21 சதவிகிதம் பேர் மட்டுமே சம்பளம் பெறும் வேலையில் உள்ளனர், இது கரோனாவுக்கு முன்பு இருந்ததைவிட 24 சதவிகிதத்தை விட குறைவாக உள்ளது என்று ஆய்வறிக்கை மேற்கோள் காட்டிய ஜெய்ராம் ரமேஷ், கரோனாவுக்கு பின்பு பெரும் பணக்காரா்களின் சொத்துகள் மட்டும் பல மடங்கு அதிகரித்துள்ளது. மாத சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினர், உழைத்துப் பிழைக்கும் மக்களும் பொருளாதாரரீதியாக பின்னோக்கித் தள்ளப்பட்டு வருகின்றனா்” என்று ரமேஷ் கூறினார்.
முக்கியமாக கிராமப்புற மக்களின் வருவாய் பெருமளவு குறைந்துவிட்டது. அதாவது விலைவாசி உயா்வுக்கு ஏற்ப அவா்களால் பொருள்களை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். அவர்களின் உண்மையான ஊதியம் 1-1 ஆக குறைந்துள்ளது. மோடி ஆண்டுக்கு 5 சதவிகித “கிராமப்புற மக்களை ஏழைகளாக்குகிறார்” என்று குற்றம் சாட்டினார்.
மோடி அரசின் பல திட்டங்கள் அதிகம் விளம்பரப்படுத்தப்பட்டு பிரபலப்படுத்தப்படுகின்றன. ஆனால், அதற்கேற்ப பலன்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும், சீர்திருத்தத்திற்கான பரிந்துரைகளை மட்டுமே வழங்குகிறது. உதாரணமாக ‘திறன்மிகு இந்தியா’ திட்டத்தில் வேறும் 4.4 சதவீதம் இளைஞா்களுக்கு மட்டும் பெயரளவில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், முற்றிலும் தோல்வியடைந்ததாகவே ரமேஷ் கூறினார்.
காங்கிரஸின் நியாய பத்ராவில் வாக்குறுதியளிக்கப்பட்ட “ஒரு புதிய திறன் முயற்சி மிகவும் அவசியமானது – பயிற்சிக்கான உரிமை’ என்பது காலத்தின் தேவை” என்று ரமேஷ் கூறினார்.
“முத்ரா மற்றும் ஸ்வநிதி போன்ற சிறு வணிகங்களுக்கு வழங்கும் கடன் திட்டங்கள் மிகப்பெரிய தோல்வியையே சந்தித்துள்ளன, மேலும் ‘பெரிய அளவிலான மறுசீரமைப்பு’ தேவைப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
இளைஞா்கள் குறைந்த ஊதியத்துக்கு பணியாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனா். மக்கள் அன்றாட செலவுகளுக்குக் கூட பணம் ஈட்ட முடியாத நிலை உருவாக்கியுள்ளது.
நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.400 என்ற காங்கிரஸின் உத்தரவாதம் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
கட்டுமானத் துறையில் இந்தியா அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அரசு பெரிய அளவிலான சமூக வீட்டுத் திட்டத்தைத் தொடங்க வேண்டும், ”என்று அவர் தனது அறிக்கையில் மேலும் கூறினார்.
” பிரதமரும் அவரது பொருளாதார வல்லுநர்களும் வேலையின்மை குறித்த கருத்தை தொடர்ந்து கண்டுகொள்ளப்படாததால் 2014 ஆம் ஆண்டிலிருந்து நாம் பார்த்து வரும் வேலையின்மை, ஒருவேளை இன்னும் அபாயகட்டமான வேலையின்மைக்கு வழிவகுக்கும்” என்று ரமேஷ் தெரிவித்துள்ளார்.