சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘45″.
இதனை இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்கியிருக்கிறார். ராஜ் பி. ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இப்படம் வரும் டிச. 25 வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (டிச. 22) நடைபெற்றிருக்கிறது.
இதில் கலந்துகொண்ட சிவராஜ்குமாரிடம் செய்தியாளர் ஒருவர், “தமிழ்நாட்டில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து, நட்சத்திர நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், விஜய் உள்ளிட்டோர் அரசியலுக்கு வருகிறார்கள்.
அதே போல கர்நாடகாவில் இருக்கும் நீங்கள், உபேந்திரா சார் எல்லாம் அரசியலுக்கு வரவில்லை. ஏன்? என்ன காரணம்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.