45 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்?

Spread the love

70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், ‘அர்மான் திரைப்படத்தின் பாடலான ‘ரம்பா ஹோ’ பாடலுக்கு புடவையில், மிக நேர்த்தியான உடல் மொழியில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. யார் இவர் என்று சமூக வலைதளங்களை ஸ்க்ரோல் செய்தால், ’80-ஸ்களின் ‘ஓஜி’ என்றெல்லாம் நெட்டிசன்கள் கமென்ட்களை தெறிக்க விட்டிருந்தார்கள். வீடியோவில் இருக்கும் அந்தப் பெண் பற்றிய சின்ன பயோ…

kalpana

1981 – ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான அர்மான் திரைப்படத்தில், ‘ரம்பா ஹோ’ பாடலை கடந்த ஆண்டு துரந்தர் திரைப்படத்தில் ரீமேக் செய்திருந்தார்கள். ரீமேக் செய்யப்பட்டப் போது, மீண்டும் அந்தப் பாடல் டிரெண்ட் ஆனது. அந்த பரபரப்பு அடங்கும் முன், அந்தப் பாடல் மீண்டும் சமூக வலைதளத்தை நிரப்பக் காரணம்,அர்மான் திரைப்படத்தில், ‘ரம்பா ஹோ’ பாடலுக்கு நடமாடியிருந்த கல்பனா, 45 வருடங்களுக்குப் பிறகு ஒரு திருமண வீட்டில் மீண்டும் அந்தப் பாடலுக்கு நடனமாடி தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டதே…

1978 – ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் முதல் ரன்னர் அப், மிஸ் வேர்ல்ட் போட்டியில் டாப் 15 இடம் என பரபரப்பாக இருந்தவர் கல்பனா. மாடலிங் மூலம் திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்தவர், ‘ரம்பா ஹோ’, ‘ நாச்சே நாச்சே’ போன்ற ஹிட் பாடல்களைக் கொடுத்தார். 100க்கும் மேற்பட்ட ஹிந்தி திரைப்படங்கள், சீரியல்களில் நடித்தவர். 

kalpana

கல்பனா வழங்கிய பேட்டிகள் மற்றும் சமூக வலைதள பதிவுகளில், ” 69 வயதில் இது எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பரிசு என்று தான் சொல்ல வேண்டும். நான் என் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். மணமகனின் தந்தை என்னை நடனமாடுபடி கேட்டுக்கொண்டார். எனக்கு முன்பு நிறைய பேர் நடனமாடினார்கள். அங்கு மேடை ஏறும் போதும், என்னைச் சுற்றி குழந்தைகள் நிறைய பேர் இருந்தார்கள். எனக்கு எனர்ஜி கிடைத்தது. எந்த முன்னேற்பாடும் , பயிற்சியும் இல்லாமல் ஆடினேன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நீண்ட காலம் கழித்து அந்தப் பாடலை நான் கேட்கிறேன். 

ஆடி முடித்து வீட்டுக்கு வந்துவிட்டேன். அடுத்த நாள் காலையில் என் உறவினர்கள் எல்லாம் போன் செய்து பாராட்டுகிறார்கள். அந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது. மிஸ் அழகிப் போட்டியில் பிகினியில் இருந்த என் புகைப்படத்தையும், இப்போதைய புகைப்படத்தையும் ஒப்பிட்டு பலரும் என் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். உண்மையில் கனவு போன்று இருக்கிறது.

மீண்டும் திரைத்துறைக்கு வர ஆர்வத்துடன் இருக்கிறேன். மக்கள் கொடுக்கும் அனைத்து அன்பிற்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார். கல்பனாவின் பூர்வீகம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *