புரி கோயில் பொக்கிஷ அறை கடைசியாக கடந்த 1978-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
இப்போது 46 ஆண்டுகளுக்குப் பின் பழுதுபாா்ப்பு மற்றும் விலைமதிப்புமிக்க தங்கம், வெள்ளி ஆபரணங்கள், இதர பழங்காலப் பொருள்களை முழுமையாக பட்டியலிடும் பணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
12 ஆம் நூற்றாண்டின் ஸ்ரீ ஜெகநாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறையில் வைரங்கள், தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற ரத்தினங்கள் உள்ளிட்ட அரிய வகை நகைகள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக பக்தர்கள் மற்றும் மன்னர்களால் ஜெகந்நாதருக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.
ஒடிஸாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் புரி ஜெகந்நாதா் கோயிலின் பொக்கிஷ அறையை திறக்கும் விவகாரம், முக்கிய அரசியல் பிரச்னையாக எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.