பிரபல மலையாள் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஆசிப் அலி நடித்துவந்த படத்தின் படப்பிடிப்பு 48 நாள்களில் நிறைவடைந்ததாக இயக்குநர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மிராஜ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.
இந்தப் படத்தின் பூஜை கோழிக்கூடில் நடைபெற்றது. இந்தப் படத்தின் தலைப்புக்கு கீழே ‘அருகில் வரும்போது மறைந்துவிடும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு சதீஷ் குரூப் செய்துள்ளார். விஷ்ணு ஷ்யாம் இசையமைக்கவிருக்கிறார்.
ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளிக்கு இது 6ஆவது படமாகும். ஏற்கனவே பல ஹிட் படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள்.
மிராஜ் படத்தின் திரைக்கதையை ஜீத்து ஜோசப் ஸ்ரீநிவாஸ் அப்ரோல் உடன் இணைந்து எழுதியுள்ளார்.
த்ரிஷ்யம் படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் இயக்குநர் ஜீத்து ஜோசப்.
சமீபகாலமாக மிகவும் அதிகமான வெற்றிப் படங்களைத் தருபவராக இருக்கிறார் நடிகர் ஆசிப் அலி.
ஈ4 எண்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது. திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிய சமீபத்தில் வெளியான ரேகாசித்திரம் ஓடிடியிலும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பை முடித்து இயக்குநர் ஜீத்து ஜோசப் கூறியதாவது:
என்ன ஒரு பயணம்! 48 நாள்களின் கடின உழைப்பு, சிரிப்பு, மறக்க முடியாத நிலங்கள், இத்துடன் மிராஜ் படப்பிடிப்பை முடித்துள்ளோம். இதைவிட சிறப்பான ஒரு படக்குழுவையும் அனுபவத்தையும் பார்க்க முடியாது. விடியோவாக அதன் அனுபவங்கள் எனக் கூறியுள்ளார்.