'48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை' மிரட்டும் ட்ரம்ப்; 'என்ன செய்வோம் தெரியுமா?' சீறும் ஈரான்

Spread the love

ஈரான் போர் முடிவதாகவே தெரியவில்லை.

அமெரிக்காவும், இஸ்ரேலும் மிரட்ட, பதிலுக்கு ஈரான் மிரட்ட என்று பிரச்னை பெரிதாகி கொண்டே போகிறது.

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு தனது ட்ரூத் பக்கத்தில் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ஈரான் போர்
ஈரான் போர்

என்ன எச்சரிக்கை?

“எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்திற்குள் முழுவதுமாக திறக்கவில்லை என்றால்…

அமெரிக்கா ஈரானின் வெவ்வேறு எரிசக்தி கட்டமைப்புகளை அழிக்கும். இதில் ஈரானின் மிகப்பெரிய கட்டமைப்பே முதலில் அழிக்கப்படும்” என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் பதிலடி

ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி தராமல் இருக்குமா என்ன?

Fars செய்தி நிறுவனத்தின் வழியாக, ஈரானின் இராணுவ செயல்பாட்டுக் கட்டளை அதிகாரி கதம் அல்-அன்பியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,”ஈரானின் எரிபெருள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் எதிரிகளால் தாக்கப்பட்டால் இந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் அனைத்து எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், உப்புநீக்கம் ஆகிய கட்டமைப்புகள் குறி வைக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இந்தப் போரினால் உலகளவில் எரிசக்தி கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவர்கள் கூறியுள்ளது எல்லாம் நடந்தால் நிலைமை மிகவும் மோசமடையும்.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *