5 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தடகள வீராங்கணை!

Dinamani2f2025 01 112fesaxy3n12fscreenshot 2025 01 11 122245.jpg
Spread the love

கேரளத்தில் 18 வயது தடகள வீராங்கனையை 5 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தின் பத்தினம்திட்டா பகுதியைச் சேர்ந்த 18 வயது தடகள வீராங்கனை பல்வேறு நபர்களால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குழந்தைகள் நலக் கமிட்டியில் புகாரளித்துள்ளார்.

இதில் அந்தப் பெண்ணின் பயிற்சியாளர், சக விளையாட்டு வீரர்களும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்தப் பெண்ணின் புகாரின் படி, அவருடைய மீது 13 வயதில் உறவினர் ஒருவர் ஆபாச விடியோக்களைப் பார்க்க கட்டாயப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | குஜராத் விபத்துக்குக் காரணம் என்ன? தெரியும் வரை துருவ் ஹெலிகாப்டர்கள் பறக்கத் தடை

மேலும், அந்தப் பெண்ணின் நண்பர்கள் தங்களது வீட்டின் அருகிலிருக்கும் மலைப்பகுதியில் வைத்து அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க பத்தினம்திட்டா மாவட்ட காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் 62 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு, 40 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சுபின், சந்தீப், வினீத், அனந்து, ஸ்ரீனி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்குவதற்கு குழந்தைகள் நலக் கமிட்டியும் காவல்துறையும் உறுதியளித்தனர்.

பாதிக்கப்பட்டச் சிறுமி காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். எலவும்திட்டா பகுதி காவல் நிலையத்தில் இந்த வழக்குப் பதிவு செய்திருந்தாலும், குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், மற்ற காவல் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்த வழக்கை விசாரிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கு குறித்த மேஎலதிகத் தகவல்கள் இன்று வெளியிடப்பட்டும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இன்று பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பேசி ஆதாரங்களைக் கேட்டறிவார் என்றும் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *