அகில இந்திய சவுராஷ்டிரா முன்னேற்றக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.ஜெ.சரவணன் இந்து ‘தமிழ் திசை’யிடம் கூறுகையில், “தமிழகத்தின் பல சட்டமன்றத் தொகுதிகளில், சவுராஷ்டிரா சமூகத்தினர் பரவலாக வசித்து வருகின்றனர். குறிப்பாக, மதுரை தெற்கு தொகுதி, திருப்பரங்குன்றம், திண்டுக்கல், சேலம் வடக்கு, கும்பகோணம் தொகுதிகளில் எங்கள் சமூகத்தினர் கணிசமான அளவில் வசிக்கிறார்கள். வெற்றி – தோல்வியை தீர்மானிப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில், மேற்கண்ட 5 தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் எங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த 5 தொகுதிகளிலும் பிரதானக் கட்சிகளை எதிர்த்து நாங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம்” என்றார்.