5 நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை!

Dinamani2f2025 04 212fkrnn8fcy2f202403283138536.jpeg
Spread the love

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப்.21ல் முதல் ஏப்.27 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 5 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும். அதிக வெப்பநிலையும். அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னையை பொருத்தவரை இன்று (21-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (22-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *