5 படங்களில் ரூ. 600 கோடி வசூலித்த சிவகார்த்திகேயன்!

Dinamani2f2024 11 142fp0yjcb5m2funtitled Design.png
Spread the love

நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா வணிகம் பெரிதாக உயர்ந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அப்படம் அவருக்கு ஓரளவு வெற்றியைத் தர, தொடர்ந்து 3, மனம்கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரெமோ என அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணி நடிகரானார்.

இவரை வைத்து படத்தை தயாரித்தால் லாபகரான வசூல் கிடைக்கும் என பல தயாரிப்பாளர்கள் போட்டிபோடத் துவங்கியதும், எஸ்கே புரடக்‌ஷன்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார்.

இதையும் படிக்க: ரூ. 100 கோடி பட்டியலில் இணைந்த துல்கர் சல்மான்!

இதன் முதல்படமான கனா லாபகரமான வணிகத்தைப் பெற்றது. டாக்டர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று சிவகார்த்திகேயனின் முதல் ரூ. 100 கோடி படமானது. அதன்பின், டான் படமும் ரூ. 120 கோடி வரை வசூலித்தது.

இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான், பிரின்ஸ், அயலான், மாவீரன் மற்றும் அமரன் ஆகிய 5 திரைப்படங்கள் மட்டும் ரூ. 600 கோடி வரை வசூலித்துள்ளன. இதில், டான் ரூ. 120 கோடி, பிரின்ஸ் ரூ. 40 கோடி, அயலான் ரூ. 90 கோடி, மாவீரன் ரூ. 90 கோடி மற்றும் அமரன் ரூ. 250 கோடி ஆகும்.

அமரன் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கான மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது. அடுத்ததாக, ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, பெரிய பட்ஜெட் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *