தனியார் நிறுவனத்தின் நேர்காணலில் ஒரே நேரத்தில் குவிந்த பட்டதாரிகளால் கூட்டநெரிசலில் ஏற்பட்டது.
குஜராத்தின் பரூச் நகரில், ஒரு தனியார் நிறுவனம் காலிப்பணி இடங்களுக்காக நேர்காணல் நடத்தியது. இந்த நேர்காணல் கெமிகல் இன்ஜினியரிங், மேற்பார்வையாளர் மற்றும் நிர்வாக அதிகாரி உள்பட சுமார் 10 பணியிடங்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டது.
ஆனால், இதற்காக ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நேர்காணலில், ஒரே நேரத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஹோட்டலின் முன்னிருந்த தடுப்புக்கம்பி உடைந்து விழுந்ததில் கலந்துகொள்ள வந்த இளைஞர்கள் தவறி கீழே விழுந்தனர்.
இதில் இளைஞர் ஒருவர் காயமடைந்ததுடன், அருகேயிருந்த வாகனங்களும் சேதமடைந்தன.
இந்த சம்பவம் தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்