5 மற்றும் 7 சீட்டர் எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்தும் நிசான்!

Dinamani2fimport2f20172f102f22foriginal2fnissan File.jpg
Spread the love

கொல்கத்தா: ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் 2025-26 நிதியாண்டின் கடைசி காலாண்டில் ஏழு இருக்கைகள் கொண்ட பல்நோக்கு பயன்பாடு வாகனத்தையும், 2026-27 ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டு இறுதியில் 5 இருக்கைகள் கொண்ட காம்பாக்ட் எஸ்யூவி-யையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்திய வணிகத்திற்கான புதிய தயாரிப்புகளை மறுவடிவமைக்கும் திட்டங்களின் ஒரு பகுதியாக, நிசான் ஏழு இருக்கைகள் கொண்ட பல்நோக்கு வாகனம் மற்றும் இரண்டு சிறிய எஸ்யூவிகளை அதாவது ஐந்து மற்றும் ஏழு இருக்கைகள் கொண்ட கட்டமைப்புகளில் அறிமுகப்படுத்த போவதாகவும், இதில் நிசான் தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும் என்றது.

இது குறித்து நிசான் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் செளவுரப் வத்சா மேலும் தெரிவித்ததாவது:

ஏழு இருக்கைகள் கொண்ட பி-எம்பிவி கார் இந்த நிதியாண்டின் கடைசியில் வெளிவர உள்ளதாகவும், ஐந்து இருக்கைகள் கொண்ட சி-எஸ்யூவி கார், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டு இறுதியில் வெளிவரும். அதே வேளையில், ஏழு இருக்கைகள் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி அறிமுகத்திற்கான காலக்கெடு பிறகு அறிவிக்கப்படும் என்றார்.

சென்னையில் உள்ள தனது கூட்டு ஆலையில் நிசான் தனது புதிய கார்களை உற்பத்தி செய்யும் என்றும் இந்திய சந்தைக்கான மலிவு மின்சார வாகன வடிவம் குறித்து பணியாற்றி வருகிறதாகவும், இது 2026-27ல் அறிமுகப்படுத்தப்படலாம் என்றார். இதற்கிடையில், புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்துவதால், நிசான் தனது நெட்வொர்க்கை விரிவுபடுத்த உள்ளதாகவும், கூடுதல் ஷோரூம்கள் இணைக்கவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது என்றார்.

தற்போதிய நிலையில், தங்களிடம் 159 ஷோரூம்கள் மற்றும் 123 கார் பழுதுபார்க்கும் பட்டறைகள் உள்ளன. இந்த நிதியாண்டில் மேலும் 35 முதல் 40 ஷோரூம்கள் மற்றும் கார் பட்டறைகள் திறக்க உள்ளதாகவும், அடுத்த நிதியாண்டில் மேலும் 50 ஷோரூம்கள் மற்றும் கார் பழுதுபார்க்கும் பட்டறைகளை இணைக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

2024-25 நிதியாண்டில், நிறுவனமானது அக்டோபர் 2024 ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மேக்னைட் வரிசையில் மொத்தம் 28,000 யூனிட்களுக்கு மேல் உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது.

ஏற்றுமதி பொறுத்தவரையில் சுமார் 20 சந்தைகளிலிருந்து தற்போது 65 சந்தைகளாக செயல்பாடுகளை விரிவுபடுத்தி 71,000 யூனிட்களுக்கு மேல் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க: அந்நியச் செலாவணி கையிருப்பு 67,627 கோடி டாலராக உயா்வு

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *