சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுவிட்டு 4 விண்வெளி வீரர்களுடன் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன டிராகன் விண்கலம் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது.
அன்னேமெக்க்ளெய்ன், நிகோல் அயெர்ஸ், டாகுயா ஆனிஷி, கிரில் பெஸ்கோவ் ஆகிய 4 விண்வெளி வீரர்களும் கலிஃபோர்னியாவில் பசிபிக் பெருங்கடலில் இறங்கிய ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்திலிருந்து சனிக்கிழமை(ஆக. 9) பத்திரமாக மீட்கப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை (ஆக. 8) இரவு 10.15 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விடுபட்டு பூமி நோக்கி புறப்பட்ட டிராகன் விண்கலத்தின் 17 மணி நேர பயணம் சனிக்கிழமை(ஆக. 9) முடிவுக்கு வந்தது. பசிபிக் பெருங்கடலில் இறங்கிய விண்கலத்திலிருந்த வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸ் கப்பலில் மீட்கப்பட்டனர். இதன்மூலம், ‘க்ரீயூ-10’ குழுவின் விண்வெளி ஆய்வுப் பயணம் வெற்றிகரமாக நிறைவுற்றது.