“5, 6 இடங்கள் என்ற எண்ணிக்கை கட்சியை சோர்வடைய செய்யும்; ஆனால்.!’ – மாநில செயலாளர் வீரபாண்டியன் சொல்வது என்ன? | The Communist Party of India has been allotted 5 seats; what did State Secretary Veerapandian

Spread the love

நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இந்திய கம்யூனிஸ்ட்- திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்தவகையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குறிக்கோள் என்பது..!

திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், “ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

திமுக கூட்டணி கட்சிகளை எப்போதும் மிரட்டியது இல்லை. பிரபல தலைவர்களையோ, நடிகர்களையோ மிரட்டிய வரலாறு இல்லை. எனவே ரஜினி காந்தை திமுக மிரட்டியது என்று சொல்வது ஏற்புடையது அல்ல.

இந்திய கம்யூனிஸ்ட்- திமுக தொகுதி பங்கீடு ஒப்பந்தம்

இந்திய கம்யூனிஸ்ட்- திமுக தொகுதி பங்கீடு ஒப்பந்தம்

பாஜக தான் கூட்டணி கட்சிகளை மிரட்டி கூட்டணிக்குள் சேர்க்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பெண் நடிகை குறித்து பேசியது பண்பல்ல, கண்ணியம் அல்ல. இதனை முதலில் நாங்கள் கண்டிக்கிறோம்.

இன்று முதல்வரை சந்தித்து பேசினோம். இது சாதாரண தேர்தல் அல்ல. பாஜக அமைதியான தமிழக மண்ணை சீர்குழைக்கத் துடிக்கிறது. எனவே இந்தத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குறிக்கோள் என்பது பாஜகவையும், அதன் கூட்டணியையும் வீழ்த்துவது தான்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *