தேர்தல் நெருங்குவதால் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அரசியல் கட்சிகளும் கூட்டணிகளை கிட்டதட்ட உறுதி செய்துவிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா என நான்கு மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்தல் தேதியை இன்று அறிவிப்பதாக தகவல் வந்திருந்தது.
இந்த 5 மாநிலங்களின் ஆட்சிகாலம் வருகிற மே மற்றும் ஜூன் மாதங்களில் தேதிகளில் முடிவடைகிறது. தேர்தல் சட்டங்களின்படி, ஆணையம் அந்தத் தேதிகளுக்கு முன்பாகவே தேர்தல்களை நடத்தவிருக்கிறது.
டெல்லி விஞ்ஞான் பவனில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தேதி தொடர்பாக, “மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வார்கள். நீங்கள் வாழ்வில் மிக முக்கியமான பொறுப்புகளில் ஒன்றை ஏற்கத் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் வாக்கு, நீங்கள் தேர்ந்தெடுக்கும் எதிர்காலம்.