50 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க சென்னை ஐசிஎஃப்-க்கு பணி ஆணை | Work order to Chennai ICF to manufacture 50 Vande Bharat trains

1277294.jpg
Spread the love

சென்னை: உலக அளவில் ரயில் பெட்டி தயாரிப்பில் முக்கியமான தொழிற்சாலையாக சென்னை ஐசிஎஃப் (ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை) உள்ளது.

இங்கு தற்போது வரை 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதற்கிடையில், சாதாரண அம்ரித் வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, குறுகிய தூரத்தில்உள்ள நகரங்களை இணைக்கும்வகையிலான, முதல் வந்தே மெட்ரோ ரயில் தயாரித்து, சோதனை ஓட்டமும் நடக்கிறது.

இதன் தொடர்ச்சியாக தூங்கும் வசதி கொண்ட 50 வந்தே மெட்ரோ ரயில்களை ஐசிஎஃப்-ல் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை ஐசிஎஃப்-ல் வந்தேமெட்ரோ ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை இயக்கி சோதிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் ஐசிஎஃப்-ல் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, தூங்கும் வசதிகொண்ட 50 வந்தே பாரத் ரயில்தயாரிப்பதற்கான பணி ஆணையை(ஆர்டரை) ரயில்வே வாரியம் கொடுத்துள்ளது.

ஒவ்வொரு ரயிலிலும் 16 அல்லது 24 பெட்டிகள் இருக்கும். தற்போது, இந்த ரயிலுக்கான வடிவமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. 2025-26-ம் நிதியாண்டில் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்புப் பணி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, 10 தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெங்களூருவில் உள்ள பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது. சோதனைகளுக்குப் பிறகு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *