“50 வருடம் கழித்து எடுத்தால் கூட ஸ்கூல் பையனாக நடிப்பார் போல”- ஜி.வி குறித்து விஜய் சேதுபதி| vijay sethupathy about g.v prakash

Spread the love

சினிமா மிகவும் அற்புதமான தொழில், யார் என்ன சொன்னாலும் பயப்படவே பயப்படாதீர்கள். இதை என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.

எப்படி நடிகரோ, இயக்குநரோ சினிமாவை படிக்கிறார்களோ, அதேபோல் தயாரிப்பாளர்கள் வியாபாரத்தையும், ஸ்க்ரிப்ட்டையும் படித்தால் நன்றாக இருக்கும். படியுங்கள், நிறைய படம் பண்ணுங்கள்.

இந்தப் படத்தில் மரியா இளஞ்செழியனுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. ஜி வியே நன்றாக பாட்டு போடுவார். ஆனால், ஜஸ்டின் உடன் இரண்டாவது முறை இணைந்து பணியாற்றுகிறார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

ஜஸ்டின் எனக்கு மிகவும் நெருக்கமான நபர். ‘பண்ணையாரும் பத்மினி’யும் படத்திலிருந்து பழக்கம். அவன் மீது அன்பும் மரியாதையும் எனக்கு இருக்கிறது.

சமீபத்தில் அவனுடைய ‘சர்வம் மாயா’, ‘சிறை’ போன்ற படங்கள் எல்லாம் ஹிட்டாகி இருக்கிறது. அவன் எந்த உயரத்தை அடைய வேண்டும் என நினைக்கிறேனோ, அதை நோக்கி பயணிக்கிறான்.

படத்தின் ட்ரெய்லர் மிக ஜாலியாக, சுவாரஸ்யமாக இருந்தது. ஜி வி எப்போதுமே ஸ்கூல் பையனாக நடிக்கலாம் போல. 90ஸ், ஜென் ஸீ, இன்னும் 50 வருடம் கழித்து எடுத்தால் கூட ஸ்கூல் பையனாக நடிப்பார் போல. ரொம்ப நன்றாக இருந்தது. எல்லோருக்கும் வாழ்த்துகள்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *