50,000 ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லக் கூடாது! – அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் |election dates announced model code of conduct comes into effect

Spread the love

தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் சட்டசபை பதவிக்காலம் வருகிற மே, ஜூன் மாதங்களில் முடிவுக்கு வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும். கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.

Gyanesh Kumar - தலைமை தேர்தல் ஆணையர்

Gyanesh Kumar – தலைமை தேர்தல் ஆணையர்

வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும். மேற்கு வங்கத்தில் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறும்.

முதல் கட்டம் ஏப்ரல் 23ஆம் தேதியும், இரண்டாவது கட்டம் ஏப்ரல் 29ஆம் தேதியும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும்.” எனத் தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளன. அதன் முதல் கட்டமாக தலைமை செயலகத்திலுள்ள அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *