இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டதில் உருக்குலைந்தன. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகளில் 5 கிரேன்கள், 250 ரயில்வே பணியாளர்கள், 100 பேரிடர் மீட்புக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 350 பேர் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
விபத்து நடந்த இடத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் கூடுதல் பொது மேலாளர், தெற்கு ரயில்வே மற்றும் முதன்மைத் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
இன்று காலை விபத்து நடந்த இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.