6 மணி நேரத்திற்கு ஒருமுறை லாக்கவுட், சிம்கார்டு இல்லாமல் வாட்ஸ்ஆப் இல்லை: அமலுக்கு வந்த புதியவிதிகள் | Lockdown every 6 hours, no WhatsApp without a SIM card: New rules come into effect

Spread the love

வாட்ஸ்அப், டெலிகிராம், அரட்டை மொபைல் போன்ற செயலிகளை ஒரு முறை சிம் கார்டை கொண்டு பதிவிறக்கம் செய்து கொண்ட பிறகு அந்த சிம் கார்டை எடுத்துவிட்டாலும், வேறு சிம் கார்டு அல்லது இன்டர்நெட் மூலம் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும். ஆனால் இது போன்ற ஒரு வசதியால் அடையாளம் தெரியாத நபர்கள் மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து மத்திய அரசு புதிய விதிகளை கொண்டு வந்திருக்கிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டே டெலிகாம் சைபர் பாதுகாப்பு விதிகள் வெளியிடப்பட்டன. அந்த விதிகள் இப்போது மீண்டும் கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விதிகள் வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வர இருக்கிறது. இதன்படி இனி வாட்ஸ்அப் போன்ற செயலிகள் இனி சிம் கார்டு இல்லாமல் செயல்படாது என்று மத்திய அரசு அதில் குறிப்பிட்டுள்ளது.

WhatsApp | வாட்ஸ்அப்

WhatsApp | வாட்ஸ்அப்

நவம்பர் 28ஆம் தேதி இது தொடர்பாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வெளியானதிலிருந்து அடுத்த 90 நாட்களுக்குள் சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் செயல்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று மொபைல் செயலி நிறுவனங்களுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *