பாராளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் தமிழகம்,ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்து உள்ளன.
6- ம் கட்ட தேர்தல்
இன்று(25ந்தேதி) 6 ம் கட்ட வாக்குப்பதிவு மேற்கு வங்காளம், பீகார், அரியானா, ஜம்முகாஷ்மீர் உள்ளிட்ட 8 மாநிலங்களில் மொத்தம் 58 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்றது. காலை முதல் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது.மொத்த 59.12 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இன்று நடைபெற்ற ஓட்டுப்பதிவில் அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 78.19 சதவீதம் பதிவாகி உள்ளன. குறைந்த பட்சமாக ஜம்முகாஷ்மீரில் 52.28 சதவீதம் பதிவாகி இருக்கிறது.
6 ம் கட்ட பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் மாநிலம் வாரியாக வருமாறு-
மாநிலம் வாரியாக
🗳️பீகார் – 53.50%
🗳️ஹரியானா – 58.44%
🗳️ஜம்மு-காஷ்மீர் – 52.28%
🗳️ஜார்க்கண்ட் 62.87%
🗳️டெல்லி -54.59%
🗳️ஒடிசா – 60.07%
🗳️உத்தரப்பிரதேசம் 54.03%
🗳️மேற்கு வங்கம் – 78.19%
பாராளமன்ற தேர்தலில் இறுதி கட்டமான 7-ம் கட்ட வாக்குப்பதிவு வருகிற ஜுன்1 ந்தேதி 8 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இதன் பின்னர் 3 நாட்கள் இடைவேளைக்கு பிறகு ஜுன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாடுமுழுவதும் பாராளுமன்ற தொகுதிவாரியாக நடைபெற உள்ளது.
மோடி -காங்கிரஸ்
அப்போது மோடி 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிப்பாரா அல்லது காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்குமா என்பது தெரியவரும்.
தேர்தல் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் ஜுன்4 ந்தேதி அன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணிநேரத்திலேயே நாடுமுழுவதும் முன்னணி நிலவரம் தெரிந்து விடும் என்பதால் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.