தெற்கு லெபனானில் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 ராணுவ நிபுணர்கள் பலியாகினர்.
தெற்கு லெபனானின் ஜிப்கின் கிராமத்தில் உள்ள ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிபொருள்கள் சனிக்கிழமை வெடித்துச் சிதறின. இந்த சம்பவத்தில் 6 ராணுவ நிபுணர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
ராணுவ நிபுணர்கள் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், குண்டுவெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.